த.ஜோன்ஸ் பாசில் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : த.ஜோன்ஸ் பாசில் |
இடம் | : dindigul |
பிறந்த தேதி | : 02-Jan-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 181 |
புள்ளி | : 42 |
மன்னித்துவிடு
உன்னவள் என்னை....
சண்டைக்குப்பின்
நீ மௌனமாய்
பேசாமல் இருந்த
காரணத்திற்காய்
மீண்டும் ஒருமுறை
சண்டையிட காத்திருக்கிறேன்...
ஏற்றுக்கொள்
மழை பொழியுமட்டும்
நம் அன்பு பொழியட்டும்
முடிவில்லாத அந்த இரவின்
நிசப்தத்தில் மூழ்கிக்கொண்டிருந்த
ஒவ்வொரு நொடியும் ...
நினைவில் மவுனமாய் விழியோரம்
யாரும் கவனியாத புன்னகையை
உதிர்த்துக்கொண்டிருந்தாள்
.
.
உயிர்பிழைத்திருந்தேன்
முற்றுப்புள்ளிக்கு முன்...
எனக்கும் அவளுக்கும்
அவளுக்கும் எனக்குமாக
இமையசைவில் பரிமாறப்படுகிறது
கொஞ்சம் நட்பு.
நடப்பைக் காப்பாற்ற
நூலிழையில் அறுக்கப்படுகிறது
கொஞ்சம் காதல்.
இப்பிரிவினைக்கான
அசையாமல் நின்றன இமைகள்...
வழிந்தோடியது கொஞ்சம்
மறைக்கப்பட்ட காதல்
அவள் நினைவில்லாயிடம்
என்னில் உயிரேயில்லை.
இவள் நினைவுற்ற இடம்
வேற்றுருக்கேதும்
என்னில் தடமேயில்லை.
உயிரில்லாவெளிதனில்
பிறையில்லா இரவினில்
இமைமூடிய கணமதில்
இருளிள்
அவளே நின்றாள்...
முற்றுப்புள்ளிக்கு முன்...
எனக்கும் அவளுக்கும்
அவளுக்கும் எனக்குமாக
இமையசைவில் பரிமாறப்படுகிறது
கொஞ்சம் நட்பு.
நடப்பைக் காப்பாற்ற
நூலிழையில் அறுக்கப்படுகிறது
கொஞ்சம் காதல்.
இப்பிரிவினைக்கான
அசையாமல் நின்றன இமைகள்...
வழிந்தோடியது கொஞ்சம்
மறைக்கப்பட்ட காதல்
அவள் நினைவில்லாயிடம்
என்னில் உயிரேயில்லை.
இவள் நினைவுற்ற இடம்
வேற்றுருக்கேதும்
என்னில் தடமேயில்லை.
உயிரில்லாவெளிதனில்
பிறையில்லா இரவினில்
இமைமூடிய கணமதில்
இருளிள்
அவளே நின்றாள்...
என்
சிறிய வீட்டில்
பசி எடுக்கவில்லை
ஆடை அணியவில்லை
கண்களைக்கூட திறந்ததில்லை
மிதந்தேன்
அங்குமிங்குமாக
மிதந்துகொண்டே
உருண்டேன்
ஒரு வழியாய்
பத்தாம் மாதம்
ஒரு நாள் உந்தி உதைத்து
முட்டி மோதி
என் வீட்டின் கதவைத்திறந்தேன்
சில்லென்று
ஒரு பெருங்காற்று நிரப்பியது
உடல் முழுவதையும்
பயந்து
பின் சென்று
ஒளிந்துகொள்ள முயன்றேன்
விடாப்பிடியாய்
வெளியே இழுத்தனர்.
கத்திக்கதறினேன்
பயனில்லை
பதிலுக்கு
என் வீட்டுக்கும் எனக்கும்மான
இணைப்பின் பிணைப்பையே
அறுத்தனர்
புரிந்தது
என் வீட்டைவிட்டு
பிரிகப்பட்டுள்ளேன் என்று
ஒரே வலியும்
கோபமும் பசியும் எனக்கு
கண்ணை இருகமுடியபடிய
மழை பெய்த அந்நாளில்
படிகளில் நிசப்தம்
சிதறியிருந்த உணவுத்துண்டுகளில்
பரிமாறப்பட்ட உணர்வுகள்
தேய்ந்துபோன சுண்ணத்துண்டுகளில்
எங்களின் புன்னகை
தூசிபடிந்த மேசைகள் கணநொடி
அறையெங்கும் நண்பர்களின் சப்தம்.
கதவிடிக்கில் சில்லென்ற காற்று
நினைவில் சொல்லப்படாத காதல்.
சன்னல் ஓரத்தில்
அமர்ந்த பறவை சென்ற பின்னும்
நிழல் மட்டும் நெஞ்சோடு
இலைகள் உதிர,
ஊடுருவிய எச்சமான வெளிச்சத்தில்
நினைவுகளோடு பயணித்தபடி நான்...
எனக்கும் அவளுக்கும்
அவளுக்கும் எனக்குமாக
இமையசைவில் பரிமாறப்படுகிறது
கொஞ்சம் நட்பு.
நடப்பைக் காப்பாற்ற
நூலிழையில் அறுக்கப்படுகிறது
கொஞ்சம் காதல். இப்பிரிவினைக்கான
அசையாமல் நின்றன இமைகள்.
வழிந்தோடியது கொஞ்சம்
மறைக்கப்பட்ட காதல்.
என்
சிறிய வீட்டில்
பசி எடுக்கவில்லை
ஆடை அணியவில்லை
கண்களைக்கூட திறந்ததில்லை
மிதந்தேன்
அங்குமிங்குமாக
மிதந்துகொண்டே
உருண்டேன்
ஒரு வழியாய்
பத்தாம் மாதம்
ஒரு நாள் உந்தி உதைத்து
முட்டி மோதி
என் வீட்டின் கதவைத்திறந்தேன்
சில்லென்று
ஒரு பெருங்காற்று நிரப்பியது
உடல் முழுவதையும்
பயந்து
பின் சென்று
ஒளிந்துகொள்ள முயன்றேன்
விடாப்பிடியாய்
வெளியே இழுத்தனர்.
கத்திக்கதறினேன்
பயனில்லை
பதிலுக்கு
என் வீட்டுக்கும் எனக்கும்மான
இணைப்பின் பிணைப்பையே
அறுத்தனர்
புரிந்தது
என் வீட்டைவிட்டு
பிரிகப்பட்டுள்ளேன் என்று
ஒரே வலியும்
கோபமும் பசியும் எனக்கு
கண்ணை இருகமுடியபடிய
தொட்டில்
குழந்தையின்
மடியிலும் மார்பிலும்
பலரும் உறங்கினர்
அம்மா இல்லாத பொம்மைகள்
நிலவும் முகிலுமாய்
நம் காதல்
பகலில் என் மறைவில் நீ
இரவில் உன் ஒளியில் நான்